அன்றும் இன்றும்

தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் சிறு விவசாயமும் சிறு விவசாயியும் அழியும் தருவாயில் இருப்பதைக் கண்டு மனம் வெம்பிய ஒரு சிறு விவசாயி மகனின் புலம்பல்.



பாரதி அன்று 

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்

என் கருத்து: தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் காடு மேடுகளை அழித்து சமன் செய்து விவசாயம் செய்து மனித குலத்திற்கு உணவிடுவோம்.

அரசியல் இன்று

தனி ஒரு மந்திரிக்குப் பல கோடி இல்லையெனில்
அடைந்திடுவானே பொறம்போக்கு நிலம்
தனி ஒரு சட்ட மன்ற உறுப்பினர்க்குப் பேராசையெனில்
அபகரித்திடுவானே ஏழை விவசாயி நிலம்
பேராசைப் பேய்களிடமிருந்து விளை நிலங்களைக் காக்க வில்லையெனில்
சிதைந்திடுமே உணவின்றி மனித குலம்

---------------

அவ்வையார் அன்று:

நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்

அவலம் இன்று:

வரப்பை உயற்ற விவசாயி இல்லை
நீரை உயற்ற மழையும் இல்லை
குடியை காக்கும் கோனும் இல்லை
இவை அனைத்தும் இருப்பினும்
விவசாயம் செய்ய நிலம் இல்லாக் காலம் தொலைவில் இல்லை

---------------


மருதகாசி அன்று:

விவசாயி.... விவசாயி....
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி 

அப்பா இன்று:

மகனைப் பெற்ற விவசாயி அப்பா கூறுகிறார் 
நல்ல படிடா மகனே இல்லையென்றால் 
நீயும் என்னைப் போல மாடு மேய்க்க வேண்டியது தான் 

மகளைப் பெற்ற விவசாயி அப்பா கூறுகிறார் 
எப்படியாவது சொத்தை அடமானம் வைத்தாவது 
வேலைல இருக்கிற மாப்பிள்ளைக்குப்  பொண்ணை கட்டிக் கொடுக்கணும் 

---------------

விவசாயம் என்னப் பாவச் செயலா 
விவசாயி என்னப்  பாவப் பிறவியா

வேர்வையும் ரத்தமும் சிந்தி உழைப்பவன்
அவன் மனித குலத்திருக்கு உணவிடுபவன் 

அவன் தேடுவது மாட மாளிகைகள் அல்ல
வசிப்பது கூட கோபுரமும் அல்ல

அவனுக்கு வேலை ஓய்வூதியம் கிடையாது
வேலையில் இருந்து சாகும்வரை ஓய்வும் கிடையாது

விவசாயப் பொருளுக்குக் குறைந்த விலைக் கட்டுப்பாடு இல்லை
அவன் உழைப்பில் குளிர் காயும் தரகர்களுக்கு அளவும் இல்லை

கொண்டாட வேண்டுமல்லவா இந்த தியாகிகளை
வாழவைக்க வேண்டுமல்லவா இந்த அமுத சுரபிகளை 

Comments

Post a Comment

Popular posts from this blog

கசடற கல்

Being an Indian Father in America