Posts

Showing posts from May, 2015

அன்றும் இன்றும்

Image
தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் சிறு விவசாயமும் சிறு விவசாயியும் அழியும் தருவாயில் இருப்பதைக் கண்டு மனம் வெம்பிய ஒரு சிறு விவசாயி மகனின் புலம்பல். பாரதி அன்று  தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என் கருத்து: தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் காடு மேடுகளை அழித்து சமன் செய்து விவசாயம் செய்து மனித குலத்திற்கு உணவிடுவோம். அரசியல் இன்று தனி ஒரு மந்திரிக்குப் பல கோடி இல்லையெனில் அடைந்திடுவானே பொறம்போக்கு நிலம் தனி ஒரு சட்ட மன்ற உறுப்பினர்க்குப் பேராசையெனில் அபகரித்திடுவானே ஏழை விவசாயி நிலம் பேராசைப் பேய்களிடமிருந்து விளை நிலங்களைக் காக்க வில்லையெனில் சிதைந்திடுமே உணவின்றி மனித குலம் --------------- அவ்வையார் அன்று: நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான் அவலம் இன்று: வரப்பை உயற்ற விவசாயி இல்லை நீரை உயற்ற மழையும் இல்லை குடியை காக்கும் கோனும் இல்லை இவை அனைத்தும் இருப்பினும் விவசாயம் செய்ய நிலம் இல்லாக் காலம் தொலைவில் இல்லை ----...

முத்தமிழ்ச் சங்க தமிழ்ப் புத்தாண்டு விழா

Image
I wrote this as "Vote of Thanks" for MSCF Tamil New Year celebrations in 2012. I thought this would be apt to publish right before Tamil New Year celebrations in 2015. Team 2015 rocks, go MSCF!! முத்தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்புத்தாண்டு விழா அனைவரின் நெஞ்சம் கவர்ந்த ஒரு வெற்றி விழா வெற்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க இயலா வரலாறு காணாத மாபெரும் வெற்றி விழா இம்மாபெரும்   வெற்றி விழாவைத் தந்த உழைப்பிற்கு நன்றி நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க இயலா கடின உழைப்பிற்கு நன்றி பங்கேற்றக் குழந்தைச் செல்வங்களுக்கு நன்றி குழந்தைகளை ஊக்குவித்தப் பெற்றோருக்கு நன்றி பங்கேற்றப் பெண்டிருக்கு நன்றி பெண்டிர் பயிற்சி கொண்ட போது சமைத்து , பாத்திரம் தேய்த்து , குழந்தைகளை கவனித்துக்கொண்ட கணவன்மார்களுக்கு நன்றி பங்கேற்ற ஆடவருக்கு நன்றி எங்கு போனால் என்ன என்று அவர்களை அவிழ்த்து விட்ட மனைவிமார்களுக்கு நன்றி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த நிகழ்ச்சிக் குழுவிற்கு நன்றி நிகழ்ச்சிக் குழுவிற்கு ஆதரவு ...

கசடற கல்

As a kid I used to read a lot of Tamil monthlies like Kumudam, Anandha Vikatan and Rani that my parents used to buy. Of course I have read a lot of Pattukkottai Prabakar and Rajeshkumar (famous detectives Vivek and Rupala) as well. But the short stories always inspired me a lot, short and simple to read and one single sketch that showed a scene from the story. Here is one such attempt I made, and my first one too at a short story. A good friend said this has good resemblance to my personal life but not sure. தொழிற்க்கல்வி நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் முறையில் அரசாங்கக் கல்லூரியில் இடம் கிடைத்ததில் அகிலனுக்குப் பெருமகிழ்ச்சி. அதுவும் அவன் ஆசைப்பட்டப் பாடம், ஆசைப்பட்டக் கல்லூரி. அவன் அம்மா அப்பாவின் நெடுநாள் கனவு நினைவானது. கல்லூரி விடுதி வாழ்க்கையின் சுவாரஸ்யம் அகிலனுக்குத் புல்லரிப்பைத் தந்தது. படிப்பு முடிந்து முதல் மாதச் சம்பளத்தில் அப்பா அம்மாவுக்கும், தங்கைக்கும் என்ன வாங்கி கொடுக்க போகிறோம் என்று ஒரு பட்டியல் தயாராக இருந்தது. "பொட்டி...