முத்தமிழ்ச் சங்க தமிழ்ப் புத்தாண்டு விழா


I wrote this as "Vote of Thanks" for MSCF Tamil New Year celebrations in 2012. I thought this would be apt to publish right before Tamil New Year celebrations in 2015.

Team 2015 rocks, go MSCF!!


முத்தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்புத்தாண்டு விழா
அனைவரின் நெஞ்சம் கவர்ந்த ஒரு வெற்றி விழா
வெற்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க இயலா
வரலாறு காணாத மாபெரும் வெற்றி விழா

இம்மாபெரும்  வெற்றி விழாவைத் தந்த உழைப்பிற்கு நன்றி
நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க இயலா
கடின உழைப்பிற்கு நன்றி

பங்கேற்றக் குழந்தைச் செல்வங்களுக்கு நன்றி
குழந்தைகளை ஊக்குவித்தப் பெற்றோருக்கு நன்றி

பங்கேற்றப் பெண்டிருக்கு நன்றி
பெண்டிர் பயிற்சி கொண்ட போது சமைத்து, பாத்திரம் தேய்த்து, குழந்தைகளை கவனித்துக்கொண்ட கணவன்மார்களுக்கு நன்றி

பங்கேற்ற ஆடவருக்கு நன்றி
எங்கு போனால் என்ன என்று அவர்களை அவிழ்த்து விட்ட மனைவிமார்களுக்கு நன்றி

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த நிகழ்ச்சிக் குழுவிற்கு நன்றி
நிகழ்ச்சிக் குழுவிற்கு ஆதரவு தந்த தன்னார்வலர்களுக்கு நன்றி

அறுசுவை உணவு அளித்த விருந்துக் குழுவிற்கு நன்றி
தன் கணவன்மாரை பட்டினிப் போட்டு நம் பசியாற சமைத்த தன்னார்வலர்களுக்கு நன்றி

சமையல் செய்ய உதவிய கோவில் உணவுக்கூட நண்பர்களுக்கு நன்றி
நிகழ்ச்சிகளை அளித்த விளம்பரதாரர்களுக்கு நன்றி

உணவு பரிமாறிய தோழர் தோழிகளுக்கு நன்றி
அவர்கள் அளித்த அறுசுவை உணவிற்கு நன்றி

மேடை அலங்காரம் செய்த அன்பர்களுக்கு நன்றி
ஒளி ஒலி அமைத்த தோழர்களுக்கு நன்றி

கடினமாக உழைத்த உறுப்பினர்களுக்கு நன்றி
உறுப்பினர்களை ஒன்று சேர்த்த செயற்குழுவிற்கு நன்றி 
செயற்குழுவை வழிநடத்தும் சங்க முன்னோடிகளுக்கு நன்றி

கடின உழைப்பையே  களைக்க வைத்த நம் செயற்குழுவிற்கு மீண்டும் நன்றி!!

Comments

  1. Well appreciable lines! Missed the vote of thanks this year! Keep writing!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்றும் இன்றும்

கசடற கல்

Day 2 - Way too many puddles to cross to get to Sarchu