காதல் கவிதை

After I wrote my first "poetry like verse" below that I finished in a negative note, I rewrote it to bring a positive aspect to it. Here is my attempt.

கதை எழுத பேனா ஏந்தினேன்
வந்தது கதை அல்ல கிறுக்கல் தான்
கவிதை பாட எத்தனித்தேன்
வந்தது கவிதை அல்ல காற்று தான்

நண்பனிடம் வினவினேன்
காதல் செய் க(வி)தை வரும் என்றான்
க(வி)தைக்காக காதலித்தேன்
வந்தது க(வி)தை அல்ல கண்ணீர் தான்

நண்பனிடம் முறையிட்டேன்
"காதலித்தேனடா க(வி)தைக்காக
பாவம் என்னடா நான் செய்தேன்
இறக்கமற்று என்னை எறிந்து விட்டாளே இன்னொருவனுக்காக"

"நீ ஒரு முட்டாளடா!!"
எல்லி நகையாடினான் என் நண்பன்
"சொன்னாளே அவளும் அதைதானடா"
உருகினேன் வருத்தத்தில் நான்

"பெண்ணை நீ காதலி என்று  
கூறவில்லையே நான் உன்னிடம்
எனினும் காதலிக்க வேண்டுமென்று
சொல்லியது நானே உன்னிடம்"

"மண்ணை நீ காதலித்திருந்தால்
தேசப்பற்று கவிஞன் ஆயிருப்பாய்
விண்ணை நீ காதலித்திருந்தால்
புகழ் பெற்ற அறிஞன் ஆயிருப்பாய்"

"முட்டாள் பெண்ணை நீ காதலித்ததால்
உன் வாழ்வை நீ இழந்திருப்பாய்
காதலுக்கு மாற்று பொருள் அறியாததால்
வாழ்வில் நீ திசை மாறி சென்றிருப்பாய்"

"உண்மையான உள்ளத்தை காதல் செய்யடா
வாழ்வே சிறக்கும் ஒரு காதல் கதையாய் 
அவள் ஒருவளுக்காக  உன்னை நீ தியாகம் செய்யடா
வாழ்வே இனிக்கும் ஒரு காதல் கவிதையாய்"

Comments

Popular posts from this blog

அன்றும் இன்றும்

Priya's First Blog

Being an Indian Father in America